01

E   |   සි   |  

 திகதி: 2020-02-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0107/2020: Meethotamulla tragedy 2017 dead/disabled and compensations paid

107/2020

கெளரவ உதய பிரபாத் கம்மன்பில,— மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் மற்றும் உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலனோம்புகை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) 2017 ஆம் ஆண்டு மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததனால்,

(i) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை;

(ii) அங்கவீனமுற்றோர்களின் எண்ணிக்கை;

(iii) பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட மொத்த நட்டஈட்டுத் தொகை;

(iv) உயிரிழந்த ஒருவருக்குச் செலுத்தப்பட்ட நட்டஈட்டுத் தொகை;

(v) சேதமடைந்த வீடுகளுக்காகச் செலுத்தப்பட்ட அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச நட்டஈட்டுத் தொகை;

எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இடம்பெயர்ந்த அனைவருக்கும் நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) இடம்பெயர்ந்த ஒரு குடும்பத்திற்கு நிரந்தர வீடொன்று வழங்கப்பட்ட அண்மித்த திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-07

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks