01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0055/2020: Roads belonging to Uva Provincial Road Development Authority

55/2020

கெளரவ சமிந்த விஜேசிறி,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஊவா மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான வீதிகளின் கிலோமீற்றர் அளவு, ஒவ்வொரு மாவட்டத்தின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதையும்;

(ii) மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தரப்படுத்தலுக்கமைய மேற்படி அளவுகள் தனித்தனியே யாது என்பதையும்;

(iii) 2013 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை காப்பட் இடப்பட்ட ஊவா மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான பதுளை மாவட்டத்தின் வீதிகளின் கிலோமீற்றர் அளவு, வருடாந்த அடிப்படையில் தனித்தனியே யாது என்பதையும்;

(iv) ஊவா மாகாண சபைக்கு உரித்தான வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், பராமரிப்புச் செய்வதற்கும் நிதி ஏற்பாடுகளை வழங்கும் மூலங்கள் யாவை என்பதையும்;

(v) 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை மேலே (iv) இல் குறிப்பிடப்பட்டுள்ள மூலங்களின் கீழ் பதுளை மாவட்டத்தின் மாகாண வீதிகளை அபிவிருத்தி செய்வதற்குச் செலவிடப்பட்ட பணத்தொகை, ஒவ்வொரு வருடத்துக்கு மற்றும் மூலங்களுக்கு அமைய தனித்தனியே யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-07

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks