01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0053/2020: Foreign Trips by members and executive officers of Uva PC 2015

53/2020

கௌரவ சமிந்த விஜேசிறி,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ) ஊவா மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட வெளிநாட்டு கல்விச் சுற்றுலா பற்றி 2015 ஆம் ஆண்டில் கணக்காய்வு விசாரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை அவர் அறிவாரா என்பதையும்;

(ஆ) ஆமெனின், மேற்படி காணக்காய்வு விசாரணைக்கு அமைவாக,

(i) மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்ட பாடநெறிகள் யாவை என்பதையும்;

(ii) கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;

(iv) உத்தியோகத்தர்களை தெரிவு செய்கின்றபோது பின்பற்றப்பட்ட முறையியல் யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-06

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks