பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
46/2020
கௌரவ சமிந்த விஜேசிறி,— மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பதுளை மாவட்டத்திலுள்ள மத்திய அரசாங்கத்திற்கு மற்றும் மாகாண சபைக்கு சொந்தமான நீர்ப்பாசனத் திட்டங்கள் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(ii) மத்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான நீர்ப்பாசனத் திட்டங்களின் மூலம் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற வயல்களின் பரப்பளவு, பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாதென்பதையும்;
(iii) மாகாண சபைக்கு சொந்தமான நீர்ப்பாசனத் திட்டங்களின் மூலம் சாகுபடிசெய்யப்படுகின்ற வயல்களின் பரப்பளவு, பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாதென்பதையும்;
(iv) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை மத்திய அரசாங்கமும் மாகாண சபையும், பதுளை மாவட்டத்தில் நீர்ப்பாசனங்களின் பராமரிப்புக்காகவும் புனரமைப்பிற்காகவும் செலவு செய்துள்ள நிதித் தொகை, தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-01-23
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks