01

E   |   සි   |  

 திகதி: 2020-01-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0043/2020: Local government representatives who participated in seminars for solid waste management

43/2020

கௌரவ சமிந்த விஜேசிறி,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை திண்மக் கழிவுப்பொருள் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குபற்றிய உள்ளூரதிகார சபை பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு;

(ii) அந்த பிரதிநிதிகளின் பெயர்கள் மற்றும் ஏற்புடைய உள்ளூரதிகார சபைகள் யாவை;

(iii) அந்த செயலமர்வுகள் நடைபெற்ற நாடுகள்​, நகரங்கள் மற்றும் கால எல்லைகள் வெவ்வேறாக யாவை;

(iv) இந்த ஒவ்வொரு செயலமர்விலும் பங்கேற்பதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு;

(v) மேற்படி செயலமர்வுகளின் பின்னர் குப்பைகூள முகாமைத்துவத்திற்காக நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்கிய உள்ளூரதிகார சபைகள் யாவை;

என்பதை அவர் இச்பைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-01-22

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks