04

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0006/2020: Vocational Training for school dropouts

6/2020

கௌரவ புத்திக பத்திறண,— கல்வி அமைச்சரையும் கேட்பதற்கு,—

(அ) (i) சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் வளங்கள் நியாயமான முறையில் பிரிந்து செல்லாமை காரணமாக இலங்கையிலிருந்து வறுமையை இல்லாதொழிப்பது கடினமாக அமைந்துள்ளதென்பதையும்;

(ii) தற்போது நடைமுறையிலுள்ள பாடத்துறைசார் கல்வி முறையின் மூலம் திறன்கள் விருத்தியடையாததன் காரணமாக சமகால சமூகத்திற்குப் பொருத்தமான தொழில்வாண்மையாளர்கள் உருவாகுவதில்லையெனவும்;

(iii) சட்டப் பொறிமுறையிலும் நீதி நிருவாகத்திற்கான நடவடிக்கைகள் துரிதமாகவும் முறையாகவும் இடம்பெறுவதில்லை என்பதையும்;

(iv) மேற்படி அனைத்து விடயங்களும் இளைஞர் சமுதாயத்தின் மீது நேரடியான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றதென்பதையும்;

(v) இளைஞர்கள் சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் மேற்படி விரக்தி மனநிலை தாக்கம் ஏற்படுத்துகின்றதென்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) பாடசாலைக் கல்வியை இடையில் நிறுத்துகின்ற இளைஞர் சமுதாயத்தை தொழிற்பயிற்சி அல்லது வேறு முறையான வாழ்வாதார வழிகளில் ஆற்றுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவையென்தையும்;

(iii) பாடசாலைக் கல்வியினை தொழிற்சந்தைக்கு ஏற்றவகையில் திருத்துவதற்குப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iv) ஆமெனில் அப்பிரேரணைகள் யாவையென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-01-23

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks