பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
5/2020
கௌரவ புத்திக பத்திறண,— மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் மற்றும் உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலனோம்புகை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கண்டி நகர சபை ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெலிகந்த கிராமம் மண் சரிவுக்கு உள்ளாகும் பாரிய அச்சுறுத்தலைக் கொண்ட ஒரு பிரதேசமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் பெயரிடப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) வெலிகந்த கிராமவாசிகளுக்கு கண்டி, ஹந்தானை, கலஹ தோட்டத்தில் காணிகளும் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கான கடனும் வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;
(iii) இப்பிதேசத்தில் பாரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பழைய படிக்கட்டுகளுக்குப் பதிலாக வீதியொன்று வெட்டப்படுகின்றதென்பதையும்;
(iv) மேற்படி மண் வெட்டுவதற்காக உரிய அனுமதி பெறப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இவ்வீதி வெட்டப்படுவதை நிறுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், அது எவ்வகையில் என்பதையும்;
(iii) இச்சட்ட விரோத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iv) ஆமெனில் அது எவ்வகையில் என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-01-23
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks