04

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0002/2020: Developing Galle International Stadium

2/2020

கௌரவ புத்திக பத்திறண,— விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) காலி சர்வதேச கிறிக்கெட் மைதானத்தின் விளையாட்டரங்கு பழுதடைந்த நிலையில் உள்ளதென்பதையும்;

(ii) உரிய பராமரிப்பு இல்லாமையினால் எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்படலாம் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) காலி சர்வதேச கிறிக்கெற் மைதானத்தில் 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்ட சர்வதேச கிறிக்கெற் போட்டிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி போட்டிகளின் மூலமாக கிடைத்த வருமானம் எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி வருடங்களில் மைதானத்தின் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை ஒவ்வொரு வருட ரீதியாக தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) மேற்படி மைதானத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அந்த நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-01-21

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks