பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2010-12-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0827/2010: Base Hospital - Chilaw

0827/ ‘10

 

கெளரவ விக்டர் அன்ரனி,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)  சிலாபம் ஆதார வைத்தியசாலையை பொது ஆஸ்பத்திரியாக பிரகடனப்படுத்தி மத்திய அரசின்கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதனை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ)    (i)     சிலாபம் ஆதார வைத்தியசாலையின் கதிர் வீச்சு இயந்திரமானது செயலிழந்து மீண்டும் திருத்துவதற்கு முடியாத நிலையில் இருப்பதையும்,

(ii) மேற்படி கதிர்வீச்சு இயந்திரம் செயலிழந்துள்ளமையால் பெரும் எண்ணிக்கையிலான நோயாளர்களை சிலாபம் வைத்தியசாலையிலிருந்து மாரவில வைத்தியசாலைக்கு தினமும் அழைத்துச் செல்லவேண்டியுள்ளது என்பதையும்,

(iii) அதற்காக ஊழியர்களை ஈடுபடுத்தும் போது குறைபாடுகள் இடம்பெறுகின்றன என்பதையும்

அவர் அறிவாரா?

(இ) (i) இந்நிலைமையினால் நோயளர்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றார்கள் என்பதையும்,

(ii) அதற்காக மேலதிகமாக பெருந்தொகைப் பணத்தை செலவிட வேண்டியுள்ளதென்பதையும்

அவர் ஏற்றுக் கொள்கின்றாரா?

(ஈ) அவ்வாறெனில், செயலிழந்துள்ள கதிர்வீச்சு இயந்திரத்திற்கு பதிலாக புதிய கதிர்வீச்சு இயந்திரமொன்றை சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு துரிதமாகப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?

(உ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-12-04

கேட்டவர்

கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks