01

E   |   සි   |  

 திகதி: 2019-09-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0876/2019: மஹியங்கனை குடிநீர் வழங்கல் திட்டம்: தற்போதைய நிலைமை

876/ '19

கௌரவ தேனுக விதான​​கமகே,— நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2013 ஆம் ஆண்டில் பதுளை மாவட்டத்தில், மகியங்கனை தேர்தல் தொகுதியில்​ ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டம் தொடர்பான தற்போதைய நிலைமை யாதென்பதையும்;

(ii) அவ்வொன்றிணைந்த நீர் விநியோகத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் மூலமாக குடிநீர் வசதிகளைப் பெற்று​கொடுக்க வேண்டியிருந்த குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) குடிநீர் வசதியைப் பெற்றுக் கொடுக்க முடியாமல்போன குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) அந்நீர் விநியோகத் திட்டத்தின் தற்போதைய நிலைமை யாதென்பதையும்;

(v) இந்நீர் விநியோகத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை ஆரம்பிக்கும் ஏற்பாடொன்று காணப்படுகின்றதா என்பதையும்;

(vi) ஆமெனில், அது தொடர்பான தற்போதைய நிலைமை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) சிறுநீரக நோயாளர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்ற மகியங்கனை தேர்தல் தொகுதியிலுள்ள மக்களது குடிநீர் தேவைப்பாட்டினை பூர்த்தி செய்வதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-06

கேட்டவர்

கௌரவ தேனுக விதானகமகே, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-09-06

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks