01

E   |   සි   |  

 திகதி: 2019-04-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0859/2019: எஹலியகொட பிரதேசத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்: வீட்டு வாடகைக் கொடுப்பனவு

859/ '19

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) எஹலியகொட கரந்தன பிரதேசத்தில் மண்சரிவினால் வீடுகள் அழிவுற்ற குடும்பங்கள் எஹலியகொட பிரிவின் ஏனைய கிராம உத்தியோகர் பிரிவுகளில் மண் சரிவில் சிக்கி வீடுகள் அழிவுற்ற குடும்பங்கள் மற்றும் கடும் ஆபத்தான வலயத்தில் வசிக்கும் குடும்பங்கள் உட்பட எந்தவொரு குடும்பத்துக்கும் 2017 டிசம்பர் தொடக்கம் வீட்டு வாடகைக் கொடுப்பனவு கிடைக்கவில்லை என்பதையும்;

(ii) வீட்டு வாடகை செலுத்துவதற்காக தேவையான நிதி ஒதுக்கம் எஹலியகொட பிரதேச அலுவலகத்தில் கேட்டபோது கிடைக்கவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) அந்த நிலுவை வீட்டு வாடகைகளை செலுத்துவதற்காக தேவையான நிதி எஹலியகொட பிரதேச செயலாளருக்கு வழங்கப்படுமா என்பதையும்;

(ii) அவ்வாறெனின் அத் திகதி யாது என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-04-04

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-04-04

பதில் அளித்தார்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks