logo

02

E   |   සි   |  

 திகதி: 2019-04-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0690/2019: சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பின்போது பாதிக்கப்பட்டவர்கள்: இழப்பீடு வழங்கல்

690/ '19

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) 2016 ஆம் ஆண்டில் கொஸ்கம, சாலாவ இராணுவ ஆயுத களஞ்சியம் வெடித்தமையினால்,

(i) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) அங்கவீனமுற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iii) பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் செலுத்தப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;

(iv) உயிரிழந்த ஆளொருவருக்காக அரசாங்கத்தின் சார்பில் செலுத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;

(v) சேதமடைந்த வீடுகளுக்காக செலுத்தப்பட்ட கூடியபட்ச மற்றும் குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;

(vi) இடம்பெயர்ந்த சகலருக்கும் நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(vii) இடம்பெயர்ந்த குடும்பமொன்றிற்கு நிரந்தர வீடொன்று பெற்றுக் கொடுக்கப்பட்ட அண்மித்த திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-04-05

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2019-04-05

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks