01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0670/2019: Drinking Water Problem in Valayankattu Village Madu DS Mannar

670/ '18

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ) (i) மன்னார், மடுப் பிரதேச செயலாளர் பிரிவில் வலையன்கட்டு கிராமத்தில் மீள்குடியேறிய மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் பல மில்லியன் ரூபா செலவில் குடிநீர் விநியோகத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது என்பதையும்;

(ii) இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் முழுமைப்படுத்தப்படாமல், அரைகுறையாகக் கைவிடப்பட்டுள்ளது என்பதையும்;

(iii) இக்கிராம மக்கள் தங்களது குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மிகவும் சிரமப்படுகின்றனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி குடிநீர் விநியோகத் திட்டத்தை முழுமைப்படுத்தி வலையன்கட்டு கிராம மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

(ii) அவ்வாறெனில், அத்திகதி யாதென்பதையும்;

(iii) இல்லையெனில் அதற்குக் காரணம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-10-23

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks