01

E   |   සි   |  

 திகதி: 2019-07-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0659/2019: கந்தளாய் நகரிலுள்ள புகையிரதத் திணைக்களத்துக்குரிய சொத்துக்கள்: குத்தகை உடன்படிக்கை

659/ '18

கெளரவ சுசந்த புஞ்சிநிலமே,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) புகையிரதத் திணைக்களத்துக்குச் சொந்தமான, கந்தளாய் நகரில் அமைந்துள்ள, இன்றளவில் வருடாந்த குத்தகை அடிப்படையில் வியாபார நிலையங்கள் நடாத்தப்பட்டு வருகின்ற மற்றும் தங்கிக் குடியிருக்கின்ற இடங்களுக்கான குத்தகை உடன்படிக்கைகளை சிலர் இதுவரை நீடிக்கவில்லை என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) கந்தளாய் நகரில் அவ்வாறு குத்தகை அடிப்படையில் உள்ள ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) அவர்களில் வருடாந்த குத்தகை உடன்படிக்கையினை நீடிப்பு செய்து கொள்ளாத ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iii) அவ்வாறு குத்தகை உடன்படிக்கைகளை நீடிப்புச் செய்து கொள்ளாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-24

கேட்டவர்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-07-24

பதில் அளித்தார்

கௌரவ அர்ஜுன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks