01

E   |   සි   |  

 திகதி: 2019-07-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0621/2019: நாவலப்பிட்டி நகர அபிவிருத்தி வேலைத்திட்டம்: அமுல்படுத்தப்படாமை

621/ '18

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) நகர அபிவிருத்தி அதிகாரசபையானது 250 கோடி ரூபாவினை செலவு செய்து நாவலப்பிட்டி நகர அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தியதென்பதையும்;

(​ii) அந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாவலப்பிட்டிய நகருக்குள் பல்வேறு இடங்களில் இயங்கிவந்த வர்த்தக நிலையங்களை வர்த்தமானியில் பிரசுரித்து அமைவிடம் குறிப்பிடப்பட்டதென்பதையும்;

(iii) நகரின் பல்வேறு இடங்களில் காணப்பட்ட மரக்கறி வர்த்தக நிலையங்களின் அமைவிடம் பொதுச் சந்தைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதென்பதையும்;

(iv) நகர சபையினால் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதைய ஆட்சியாளர்களினால் வர்த்தகர்களிடமிருந்து இலஞ்சம் பெறப்பட்டு நகரின் அனைத்து இடங்களிலும் மரக்கறி மற்றும் பழ விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த நடவடிக்கையை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-26

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-07-26

பதில் அளித்தார்

கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks