01

E   |   සි   |  

 திகதி: 2019-05-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0598/2019: பொலன்னறுவை மாவட்டத்தில் மணல் அகழ்வுக்காக உரிமம் வழங்கல்: விபரம்

598/ '18

கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை பொலன்னறுவை மாவட்டத்தில் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக உரிமம் வழங்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(ii) மேற்படி நபர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் யாவை என்பதையும்;

(iii) பொலன்னறுவை மாவட்டத்தில் தற்போது மணல் தொடர்பாக ஏற்பட்டுள்ள ஏகபோக உரிமையை தடுப்பதற்காக அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-07

கேட்டவர்

கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-08-06

பதில் அளித்தார்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks