01

E   |   සි   |  

 திகதி: 2019-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0596/2019: Project to take over estate hospitals to the Government

596/ '19

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பெருந்தோட்டங்களில் வாழும் ஏறத்தாழ 08 இலட்சம் மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்தும் நோக்கத்தில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்கேற்ப 2014 ஆம் ஆண்டு நிறைவுபெறும் போது அவ்வாறு அரசிற்கு பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தோட்ட வைத்தியசாலைகளின் எண்ணிக்கை, வைத்தியசாலையின் பெயர் மற்றும் பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்ட காலகட்டம் யாதென்பதையும்;

(iii) தற்போது இக்கருத்திட்டம் நடைமுறையிலில்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iv) இக்கருத்திட்டத்திற்காக அமைச்சினால் செலவிடப்பட்ட பணத்தொகை வருடாந்தம் எவ்வளவென்பதை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(v) பெருந்தோட்ட சுகாதார நிலைமையை மேம்படுத்துவதற்கு இக்கருத்திட்டம் பெரும் உந்துசக்தியாக இருந்ததால் அதனை துரிதமாக மீள ஆரம்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-09

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks