04

E   |   සි   |  

 திகதி: 2019-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0547/2019: Tamilcholai school in Killinochchi District

547/ '19

கௌரவ எஸ். சிறீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ்ச் சோலை என்ற பெயரில் பாடசாலையொன்று இயங்கியதென்பதையும்;

(ii) ஆமெனில், அப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

(iii) அப்பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் இறுதியாக தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கும் க.பொ.த.(சா/த) பரீட்சைக்கும் தோற்றி பெறுபேறுகள் வெளியிடப்பட்ட ஆண்டுகள் வெவ்வேறாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவாரா?

(ஆ) (i) தற்பொழுது இப்பாடசாலை அழைக்கப்படும் பெயர் யாதென்பதையும்;

(ii) இப்பாடசாலைக்கு யாரினால் பெயரிடப்பட்டது என்பதையும்;

(iii) அவ்வாறு பெயர் மாற்றப்பட்ட தினம் யாதென்பதையும்;

(iv) பாடசாலையின் பெயரினை மாற்றுவதன் மூலம் இப்பாடசாலையின் ஸ்தாபகர் அல்லது நிறுவுனர் என்ற அந்தஸ்த்தினை வேறு யாரும் பெற்றுக்கொள்ள முடியுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-09

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks