01

E   |   සි   |  

 திகதி: 2019-03-27   பதிலளிக்கப்பட்டவைகள் 

0538/2019: மாணவர் அனுமதி நடைமுறை: தர்மராஜ கல்லூரி, கண்டி

538/ '19

கெளரவ பிமல் ரத்நாயக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கண்டி தர்மராஜ கல்லூரிக்கு பிள்ளைகளை அனுமதிக்கும்போது வசிப்பிடத்தை உறுதி செய்வதற்காக இறையிலி உறுதி, அன்பளிப்பு உறுதி மற்றும் குத்தகை உறுதிகளைச் சமர்ப்பிக்கின்ற ஆட்களுக்கு அதிக புள்ளிகள் கிடைக்கின்றன என்பதையும்;

(ii) மேற்படி உறுதிகள் இல்லாத நகர சபை வீடுகளில் வசிக்கின்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமது வசிப்பிடத்தை உறுதி செய்வதற்கு இருப்பது நகர சபையினால் வழங்கப்படுகின்ற வரி செலுத்தியதற்கான ஆவணம் மாத்திரமே என்பதையும்;

(iii) மேற்படி ஆவணத்துக்கு மிகக் குறைவான புள்ளிகள் வழங்கப்படுவதன் காரணமாக இவர்களின் பிள்ளைகளை தர்மராஜ கல்லூரிக்கு அனுமதிக்க வாய்ப்புக் கிடைப்பதில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) அரசுக்கு வரிப்பண வரியைச் செலுத்தி பல பரம்பரைகளாக இந்த வீடுகளில் வாழ்ந்து வருகின்ற குடும்பங்களின் பிள்ளைகளையும் தர்மராஜ கல்லூரிக்கு அனுமதிக்கக்கூடிய முறையியலொன்றை தயாரிப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-27

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2019-03-27

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks