01

E   |   සි   |  

 திகதி: 2019-03-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0537/2019: இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவகம்: டிப்ளோமா பட்டமளிப்பு விழா

537/ '19

கௌரவ பிமல் ரத்நாயக்க,— நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் (SLIATE) டிப்ளோமா வழங்கும் விழா இற்றைவரையில் நடத்தப்பட்ட இடம் யாதென்பதையும்;

(ii) 2017 ஆம் ஆண்டில் மேற்படி டிப்ளோமா வழங்கும் விழா நடத்தப்பட்ட இடம் யாதென்பதையும்;

(iii) இதற்காக கடந்த ஆண்டில் ஒரு டிப்ளோமாதாரியிடமிருந்து அறவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(iv) 2017 ஆம் ஆண்டில் இதற்கென ஒரு டிப்ளோமாதாரியிடமிருந்து அறவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(v) முந்திய ஆண்டுகளில் மண்டப வசதிகளுக்காக கட்டணம் செலுத்த வேண்டியேற்பட்டமையால், பணம் அறவிடப்பட்ட போதிலும், 2017 ஆம் ஆண்டில் இலவசமாக மண்டப வசதிகள் வழங்கப்படுகின்றபோதுகூட பணம் அறவிடுவதற்கான காரணம் யாதென்பதையும்;

(vi) இற்றைவரையில் டிப்ளோமா பட்டமளிப்பு விழா நடத்தப்பட்ட கொழும்பு நகரத்திற்கு பதிலாக கொழும்புக்கு வெளியே தங்குமிட வசதிகளையேனும் பெற்றுக்கொள்ள முடியாத அம்பாறை போன்ற பின்தங்கிய பிரதேசத்திற்கு இவ்விழா மாற்றப்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-25

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2019-03-25

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks