பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
534/ '19
கௌரவ பிமல் ரத்நாயக்க,— அமைச்சரவை அந்தஸ்த்தற்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வத்தளை, கொங்கிங்தொட்ட, இலக்கம் 656/102/5 ஏ எனும் முகவரியில் வசிக்கும் திரு. சுசந்த அமரசிங்ஹ நீண்ட காலமாக மேற்கொண்ட ஆராய்ச்சிகளின்படி அகற்றப்படுகின்ற கழிவுப்பொருட்களிலிருந்து சீமெந்துக் கற்களை உற்பத்தி செய்தல், வீதிகளுக்கு காபற் இடுதல் உட்பட 12 புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டுள்ளார் என்பதையும்;
(ii) இது பற்றி அச்சு ஊடகங்களின் மூலம் பல தடவைகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
(iii) இக்கைத்தொழிலை விருத்தி செய்து, நாட்டுக்கு சேவை செய்ய திரு. அமரசிங்ஹவுக்கு உதவுமாறு உங்கள் அமைச்சினாலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(iv) எனினும், இதுவரை எந்தவோர் உதவியும் வழங்கப்படவில்லை என்பதையும்;
(v) இன்றளவில், பலதரப்பட்ட தரகர்களின் மூலம் இவரது தொழில்நுட்ப அறிவை பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வெளிநாட்டு முகவர்கள் முயன்று வருகின்றனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) திரு. அமரசிங்ஹவின் இக்கண்டுபிடிப்புக்களைப் பயன்படுத்தி இவரின் உற்பத்திகளை நாட்டுக்கு அறிமுகஞ்செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனின், அந்நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iii) அந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-15
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
அமைச்சரவை அந்தஸ்தற்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks