01

E   |   සි   |  

 திகதி: 2019-03-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0531/2019: அம்பாந்தோட்டை நகர சபை வீடுகள் வீதியில் காணிச் சுவீகரிப்பு: நஷ்டஈடு

531/ '19

கௌரவ பிமல் ரத்நாயக்க,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2004.12.26 ஆம் திகதியில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தை எதிர்நோக்கிய அம்பாந்தோட்டை நகர சபை வீடுகள் வீதியின் 3/19 ஆம் இலக்கமுடைய வீட்டில் வசித்த திரு. ரீ.என். அமீர் உள்ளிட்ட 68 பேர்களின் காணிகள் 2010.03.17 ஆம் திகதி கரையோரப் பூங்காவொன்றினை நிர்மாணிப்பதற்காக சுவீகரிக்கப்பட்டதென்பதையும்;

(ii) சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக மேலே குறிப்பிட்ட குழுவினருக்கு இற்றைவரை நட்டஈடு செலுத்தப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இந்த குழுவினருக்கு நட்டஈடு செலுத்த நடவடிக்கை எடுப்பாரா;

(ii) ஆமெனில், அத் திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-11

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-05-22

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks