04

E   |   සි   |  

 திகதி: 2019-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0514/2019: Excise Income and raids under Excise Ordinance

514/ '19

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டில் மதுவரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக எவ்வளவென்பதையும்;

(ii) 2016 ஆம் ஆண்டில் புகையிலை மற்றும் சிகரட் உற்பத்தி மீது விதிக்கப்பட்ட வரியின் மூலம் ஈட்டிக்கொண்ட வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக எவ்வளவென்பதையும்;

(iii) கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், மேற்படி (i) மற்றும் (ii) இன் வருமானம் முறையே ரூபா மில்லியன்களில் எவ்வளவென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) 2016 ஆம் ஆண்டு மோல்ட் மதுசார உற்பத்தி எத்தனை லீற்றர்கள் என்பதையும்;

(ii) 2016 ஆம் ஆண்டுக்காக மதுசார உற்பத்தியை புதிதாக ஆரம்பிப்பதற்கு கம்பனிகளுக்கு புதிய உரிமப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அவ்வாறான உரிமப்பத்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அக்கம்பனிகளின் பெயர்கள் யாவையென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) மதுவரிச் சட்டத்தின் கீழ் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தத்துவமுள்ள நிறுவனங்கள் யாவை என்பதையும் அதற்கான அதிகார தத்துவம் யாருக்கு உள்ளதென்பதையும்;

(ii) கைப்பற்றப்படுகின்ற சட்டவிரோதமான மதுபானம் சம்பந்தமாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு யாருக்கு அதிகார தத்துவம் உள்ளதென்பதையும்;

(iii) அவர்களின் கடமைப்பொறுப்பு யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-09

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks