01

E   |   සි   |  

 திகதி: 2019-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0485/2019: கண்டி மாவட்ட இ.போ.ச. டிப்போக்கள்: விபரம்

485/ '19

கௌரவ ஆனந்த அலுத்கமகே,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கண்டி மாவட்டத்தில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி டிப்போக்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு டிப்போ மூலமாகவும் இன்றளவில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற பேருந்துகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி டிப்போக்களில் இலாபமீட்டுகின்ற மற்றும் நட்டத்தில் இயங்கும் டிப்போக்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

(v) மேற்படி ஒவ்வொரு டிப்போவிலும் நிலவும் வெற்றிடங்கள் யாவை என்பதையும்;

(vi) நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், இற்றைவரை டிப்போக்களில் வழங்கப்பட்டுள்ள தொழில்களின் எண்ணிக்கையும் மேற்படி தொழில்களை பெற்ற ஆட்களின் பெயர்களும் யாவை என்பதையும்;

(vii) கண்டி மாவட்டத்தில் இ.போ.ச. டிப்போக்களின் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-07

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-07

பதில் அளித்தார்

கௌரவ அர்ஜுன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks