01

E   |   සි   |  

 திகதி: 2019-07-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0451/2019: மூத்த பிரஜைகளுக்கான கொடுப்பனவில் 100 ரூபாயைப் பிடித்து வைத்தல்: இடைநிறுத்தம்

451/ '19

கௌரவ பிமல் ரத்நாயக்க,— ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 70 வயது பூர்த்தியாகியுள்ள மூத்த பிரஜைளுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மாதாந்த கொடுப்பனவு ரூ. 2000/- என்பதையும்;

(ii) 2016 சனவரி முதல் மேற்படி பணத்திலிருந்து ரூ. 100/- வழங்காமல் பிடித்தவைத்துக்கொள்வதாகவும்;

(iii) இவ்வாறு பிடித்துவைத்துக்கொள்கின்ற பணம் சமூக பாதுகாப்பு நிதியம் எனும் பெயரில் கணக்கொன்றில் சேமிக்கப்படுவதாகவும் அலுவலர்கள் அறிவித்துள்ளனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இவ்வாறு முதியோர் கொடுப்பனவிலிருந்து பணம் பிடித்துக்கொள்ளல் தொடர்பாக மூத்த பிரஜைகள் தெரிவிக்கின்ற எதிர்ப்பு காரணமாக மேற்படி பணம் அறவிடுவதை நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) இது வரை அறவிடப்பட்டுள்ள மொத்த பணம் எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி பணத்தில் மூத்த பிரஜைகளின் நன்மைக்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-23

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-07-23

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks