04

E   |   සි   |  

 திகதி: 2019-06-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0439/2019: ஆலோசகர்கள் மற்றும் பொதுசனத் தொடர்பாடல் அலுலவர்கள்: வீதி அபிவிருத்தி அதிகாரசபை

439/ '19

கெளரவ ஜயந்த சமரவீர,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016.12.31 ஆம் திகதி வரை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அங்கீகாரம் இன்றி அதிகாரசபைக்கு ஆட்சோ்ப்புச் செய்யப்பட்டுள்ள ஆலோசகர்கள் மற்றும் பொதுசன தொடர்பாடல் அலுலவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது என்பதையும்;

(ii) மேற்படி ஆட்களின் பெயர், முகவரி, செலுத்தப்படுகின்ற கொடுப்பனவு, இணைக்கப்பட்டுள்ள கருத்திட்டம், ஆட்சோ்ப்புச் செய்யப்பட்டுள்ள முறையியல், கல்வி மற்றும் வேறு தகைமைகள் மற்றும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் ஆகியவை வெவ்வேறாக யாது என்பதையும்;

(iii) இதுவரை அவர்களில் எத்தனை பேர் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதையும்;

(iv) இது தொடர்பில் அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-18

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-09-19

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks