பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0761/ ’10 கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க,— தபால், தொலைத்தொடர்புகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனம் VoIP சர்வதேச தொலைபேசிச் சேவைகள் தொடர்பில் ரெலிகொம் ஏஷியா நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றைச் செய்தள்ளதா என்பதையும், (ii) இதற்கு ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் முன் அனுமதி கிடைத்ததா என்பதையும், (iii) இந்த உடன்படிக்கையை செய்துகொள்வதற்கு முன்னர் சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்காக ஒரு நிமிடத்திற்கு (US$) 0.075 அமெரிக்க டொலர் ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்திற்குக் கிடைத்ததா என்பதையும், (iv) இந்த உடன்படிக்கை காரணமாக, மேற்படி தொகை ஒரு நிமிடத்திற்கு (US$) 0.069 அமெரிக்க டொலர் வரை குறைந்துள்ளதா என்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (ஆ) (i) மேற்படி நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துகொள்ளுமாறு 2009 ஆம் ஆண்டு செப்தம்பர் மாதத்தில் முதல் தடவையாக பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டதா என்பதையும், (ii) ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை மேற்படி பிரேரணையை சட்டம் மற்றும் நிதி ரீதியிலான விடயங்களின் அடிப்படையில் நிராகரித்ததா என்பதையும், (iii) ஆமெனின், அந்நிறுவனத்தை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்தது யார் என்பதையும், (iv) மேற்படி உடன்படிக்கை பொது நடைமுறைகளுக்கு முரணாக கையொப்பமிடப்பட்டதா என்பதையும், (v) மேற்படி உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டதன் மூலம் ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்திற்கு ஏற்படும் நட்டம் எவ்வளவென்பதையும், அவர் குறிப்பிடுவாரா? (இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-11-25
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
தொலைத்தொடர்புகள், தகவல் தொழிநுட்பவியல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks