01

E   |   සි   |  

 திகதி: 2019-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0406/2019: திரு. கே.டீ. பிரேமசிறியின் காணிச் சுவீகரிப்பு: மேன்முறையீடு

406/ '18

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வெல்லம்பிட்டி, அவிசாவளை வீதி, 137 ஆம் இலக்கத்தில் வதியும் திரு. கே.டீ. பிரேமசிறி என்பவர், வீதி அபிவிருத்திக்காக காணிகள் சுவீகரிக்கப்பட்ட போது தனக்கு ஏற்பட்ட அநீதி சம்பந்தமாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பித்த மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படாது திருப்பி அனுப்பப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) நிகழ்ந்துள்ள ஏதேனுமொரு அநீதி சம்பந்தமாக எவரேனும் ஒருவர் மேன்முறையீடொன்றை சமர்ப்பிக்கும்போது அதனை ஏற்றுக்கொள்ளல் பொதுவானதொரு சம்பிரதாயமாக இருப்பினும், அதனை நிராகரித்து திருப்பியனுப்புதல் அரச ஊழியரொருவரினால் மேற்கொள்ளக்கூடாததொரு விடயமாகும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iii) ஆமெனில், அந்த மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்டு அதற்கு நியாயமான நடவடிக்கையொன்றை மேற்கொண்டு அது சம்பந்தமாக மேன்முறையீட்டாளருக்கு அறிவிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-07

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-07

பதில் அளித்தார்

கௌரவ கபீர் ஹஷீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks