பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
405/ '18
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2017 ஏப்பிரல் மாதத்தில் கொஹுவல நகரில் ச.தொ.ச கிளையொன்று திறக்கப்பட்டதென்பதையும் இதில் அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டார் என்பதையும் அவர் ஏற்றுக்கொள்வாரா;
(ii) மேற்படி ச.தொ.ச. கிளையினால் விநியோகிக்கப்பட்ட சகல பற்றுச்சீட்டுக்களும் ஆங்கில மொழியில் மாத்திரம் அச்சிடப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா;
(iii) இதற்கு மேலதிகமாக இக்கிளையின் கணினி அலுவல்களுக்கான ஆலோசகராக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியர் ஒருவர் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா;
(iv) இதற்கான நிபுணத்துவ அறிவுடைய இலங்கையர்கள் போதிய அளவில் உள்ளபோது, வெளிநாட்டவர் ஒருவர் சேர்த்துக்கொள்ளப்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) ஆங்கில மொழியில் மாத்திரம் அச்சிடப்படும் பற்றுச் சீட்டுக்களை மும்மொழியிலும் அச்சிடுவதற்கும், கணினி அலுவல்களுக்காக இலங்கையர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-06
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks