04

E   |   සි   |  

 திகதி: 2019-02-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0401/2019: Vehicle importers who fraudulently trying to evade taxes

401/ '18

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) நாட்டின் மொத்த வரிகளில் 57% இலங்கை சுங்கத்தினால் அறவிடப்படுகின்றதென்பதையும்;

(ii) இதில் அதிக வரி வீதம் வாகன இறக்குமதி வரியாகும் என்பதையும்;

(iii) வரி செலுத்தாமலிருப்பதற்கு வாகன இறக்குமதியாளர்கள் பலவித உபாயங்களை பயன்படுத்துகின்றனர் என்பதையும்;

(iv) ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு மேலதிகமாக, 2015.02.10 ஆம் திகதிய 1901/3 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலினூடாகவும், இந்நிலைமையைத் தவிர்ப்பதற்கான கட்டளைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) எவ்வாறாயினும், 2015.09.22 ஆம் திகதிய 1933/6 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தீய வர்த்தகர்களுக்கு விரும்பியவாறு நடந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) (அ) (iv) இல் குறிப்பிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தின் பேரில் சுங்க அதிகாரிகளினால் வௌிப்படுத்தப்பட்ட விலை குறைவாகக் குறிப்பிடப்பட்ட 1000 வாகனங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டால், ரூபா 8000 மில்லியனுக்கு அதிகமான வருமானத்தை அறவிடமுடியும் என்பதையும்;

(iii) சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் கட்டளையின் பிரகாரம் 2016.09.21 ஆம் திகதி அனைத்து சுங்கப் பரிசோதனைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தியமையினால் நாடு பெருந்தொகையான வருமானத்தை இழந்துள்ளது என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) ஆமெனில், (ஆ)(iii) இல் குறிப்பிடப்பட்ட கட்டளையை செல்லுபடியற்றதாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-08

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks