பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
394/ '18
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
(அ) (i) நாட்டில் கிராமிய பாற்பண்ணையாளர்களிடமிருந்து தினசரி பெற்றுக்கொள்ளப்படும் பசுப் பால் மற்றும் எருமைப் பால் லீற்றர்களின் அளவானது தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(ii) அவற்றுக்கு மத்தியில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் பசுப் பால் மற்றும் எருமைப் பால் லீற்றர்களின் அளவானது தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(iii) மில்கோ நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்படும் பாலுக்கான செலுத்தல்கள் 15 நாட்களுக்கொருமுறை மேற்கொள்ளப்படுகின்றபோதிலும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள திரவப் பாலுக்காக இரண்டு மாதங்களாக செலுத்தல்கள் மேற்கொள்ளப்படாதமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) திருகோணமலை மாவட்டத்தில் கோமரண்கடவல, பதவி ஸ்ரீபுர, மொரவெவ, கந்தளாய், சேருவில, தம்பலகாமம், பட்டினமும் சூழலும், கிண்ணியா, மூதூர், வெருகல் மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இருக்கின்ற பாற்பண்ணையாளர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;
(ii) மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த பாற்பண்ணையாளர்களுக்கு மில்கோ நிறுவனத்தினால் தற்போது செலுத்தப்பட வேண்டிய தொகை ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவின் பிரகாரம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்,
(iii) குறிப்பிட்ட தொகை செலுத்தப்படும் திகதி யாதென்பதையும்,
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-21
கேட்டவர்
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-02-21
பதில் அளித்தார்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks