01

E   |   සි   |  

 திகதி: 2019-02-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0390/2019: மர இறக்குமதி துரிதமாக அதிகரித்தல்: காரணம்

390/'18

கௌரவ (டாக்டர்) துசிதா விஜேமான்ன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையின் வருடாந்த வெட்டுமரங்களின் பாவனை எவ்வளவென்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி வெட்டுமரத் தேவைகள் எவ்வாறு பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இலங்கைக்கு வெட்டுமரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றதென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை இறக்குமதி செய்யப்பட்ட வெட்டுமரங்களின் அளவும் அவற்றின் பெறுமதியும் ஒவ்வொரு வருடத்துக்கமைய எவ்வளவென்பதையும்;

(iii) மேற் குறிப்பிட்ட மூன்றாண்டுகளில் தளபாடங்களாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மரத்திலான பொருட்களின் பெறுமதி எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி மூன்றாண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட வெட்டுமரங்களுக்கு செலவிடப்பட்ட முழுத் தொகை எவ்வளவென்பதையும்;

(v) கடந்த காலங்களில் வெட்டுமரங்களின் இறக்குமதி துரிதமாக அதிகரித்தமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(vi) இலங்கைக்கு வெட்டுமரங்களின் இறக்குமதிக்கு செலவாகும் பெரும் தொகை அந்நிய செலவாணியின் அளவை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-07

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) துஸிதா விஜேமான்ன, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-28

பதில் அளித்தார்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks