பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
378/ '18
கௌரவ ஜயந்த சமரவீர,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2017.05.27 ஆம் திகதி ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவின் பொலேகொடயிலிருந்து இஹல வெல்கம வரை செல்கின்ற வீதியில் 1 ஆம் கட்டை எனும் பிரதேசம் மண்சரிவுக்கு உள்ளாகியமையின் மூலம் தற்போது அவ்வீதியை பயன்படுத்துவதற்கு இயலாத நிலை தோன்றியுள்ளதென்பதையும்;
(ii) இந்நிலைமை காரணமாக மேற்படி வீதியை பயன்படுத்திய இலக்கம் 819G முதுன, 819H கமகேவத்த, 824 தென்னஹேன மற்றும் 825 இஹல வெல்கம ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் அமைந்துள்ள ஓமத்த குடியேற்றம், ஓமத்த கொலணி, கம்பலகந்த, வவுலாகந்த, முதுன, பட்டேகல்ல, தென்ஹேன, சமகிபுர, இஹல வெல்கம, கல்லனமுல்ல, ஹேன்யாய மற்றும் அட்டஹவுல்ஹேன ஆகிய பிரதேசங்களில் 10,000 - 15,000 இற்கு இடைப்பட்ட மக்கள் பாரிய இன்னலுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதையும்;
(iii) இந்த வீதியை சீரமைப்பதற்கு தற்போது எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ள மேற்படி வீதியை துரிதமாக மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் காலப்பகுதி மற்றும் நிறைவுசெய்யும் காலப்பகுதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-07
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2019-03-18
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks