பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
377/ '18
கெளரவ ஜயந்த சமரவீர,— பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2017 மே 27 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் முழுமையாக, பகுதியளவில் மற்றும் சிறியளவில் சேதம் ஏற்பட்டுள்ள தொழில்முயற்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி தொழில்முயற்சி இடங்களின் எண்ணிக்கை, பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அமைய தனித்தனியே எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி தொழில்முயற்சிகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் மற்றும் சுயதொழில்வாய்ப்புக்கள் என்ற வகையில் தனித்தனியே எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி தொழில்முயற்சிகள் விலங்கு வளர்ப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் ஏனையவை என்ற வகையில் தனித்தனியே எவ்வளவு என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) அவ்வாறு வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் அழிவடைந்த தொழில்முயற்சிகள் உரித்தான ஆட்களின் பெயர், முகவரி, சேததத்தின் மதிப்பீட்டுப் பெறுமதி, மேற்படி தொழில்முயற்சி அமைந்துள்ள கிராம அலுவலர் பிரிவு மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு ஆகியவற்றை தனித்தனியே சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(ii) களுத்துறை மாவட்டத்தில் அவ்வாறு சேதமடைந்த தொழில்முயற்சிகளுக்கு இன்றளவில் அரசு நட்டஈடு செலுத்தியுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், நட்டஈடு கிடைத்த தொழில்முயற்சியாளரின் பெயர், முகவரி தொழில்முயற்சி மற்றும் செலுத்தப்பட்ட நட்டஈட்டுத் தொகை தனித்தனியே யாது என்பதையும்;
(iv) களுத்துறை மாவட்டத்தில் தற்போது நட்டஈடு செலுத்தப்பட்டுள்ள தொழில்முயற்சிகளின் எண்ணிக்கை மற்றும் மொத்த நட்டஈட்டுத் தொகை யாது என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-05
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks