01

E   |   සි   |  

 திகதி: 2019-03-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0358/2019: மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை: EPF, ETF மற்றும் GRATUITY நிலுவைத் தொகை செலுத்துதல்

358/ '18

கௌரவ வேலு குமார்,— அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரை கேட்பதற்கு,—

(அ) (i) ஊழியர் சேமலாப நிதியத்திற்கு (EPF) 2015 சனவரி 08 ஆம் திகதி உள்ளவாறாக மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையினால் (JEDB) கொடுத்துத் தீர்க்க நிலுவையாக காணப்பட்ட மிகுதிப் பணத்தொகை எவ்வளவென்பதனையும்;

(ii) மேற்குறிப்பிட்ட நிலுவைத் தொகையிலிருந்து முறையே 2015, 2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் கொடுத்துத் தீர்க்கப்பட்ட தொகை எவ்வளவென்பதனையும்;

(iii) ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு (ETF) 2015 சனவரி 08 உள்ளவாறாக மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையினால் (JEDB) கொடுத்துத் தீர்க்க நிலுவையாகக் காணப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதனையும்;

(iv) மேற்குறிப்பிட்ட நிலுவைத் தொகையிலிருந்து முறையே 2015, 2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் கொடுத்துத் தீர்க்கப்பட்ட தொகை எவ்வளவென்பதனையும்;

(v) மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையினால் (JEDB) 2015 சனவரி 08 ஆம் திகதி உள்ளவாறான நிலுவையாக உள்ள பணிக்கொடை (Graduity) மிகுதி எவ்வளவென்பதனையும்;

(vi) மேற்குறிப்பிட்ட நிலுவைத் தொகையிலிருந்து முறையே 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கொடுத்துத் தீர்க்கப்பட்ட தொகை எவ்வளவென்பதனையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-06

கேட்டவர்

கௌரவ வேலு குமார், பா.உ.

அமைச்சு

அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-06

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks