பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
324/ '18
கௌரவ இஷாக் ரஹுமான்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கலாவாவியிலிருந்து திசாவாவி வரை தண்ணீரை கொண்டு செல்லும் யோதஎல கால்வாய்க்கட்டுடன் இணைந்து காணப்படும் வீதி மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்கு சொந்தமானது என்பதையும்;
(ii) இந்த வீதியை 6 கிராமங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் பயன்படுத்துவதோடு, குறித்த வீதி சுமார் 30 வருட காலமாக புனரமைக்கப்படாததன் காரணமாக மிகவும் சீர்குலைந்த நிலையில் காணப்படுகின்றதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இந்த வீதி இதுவரை புனரமைக்கப்படாததற்கான காரணம் யாது என்பதையும்;
(ii) இந்த வீதி புனரமைக்கப்படும் திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-20
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks