04

E   |   සි   |  

 திகதி: 2019-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0249/2019: தொல்பொருளியல் இடங்கள்: லுணுகல பிரதேச செயலாளர் பிரிவு

249/ '18

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பதுளை மாவட்டத்தின் லுணுகல பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள அடையாளம் காணப்பட்ட தொல்பொருளியல் இடங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை;

(ii) அப்பிரிவில் அகழ்வுகள் மேற்கொள்ளப்படாத எனினும், அடையாளம் காணப்பட்ட தொல்பொருளியல் இடங்கள் அமைந்துள்ளனவா;

(iii) ஆமெனில், அவை யாவை;

(iv) மேற்படி பிரிவில் அமைந்துள்ள தொல்பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த ரஜமகா விகாரைகளின் எண்ணிக்கை எவ்வளவு; அது பற்றிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பாரா;

(v) மேற்படி தொல்பொருளியல் இடங்களின் பேணல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றிய முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-21

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-05-22

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks