04

E   |   සි   |  

 திகதி: 2019-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0125/2019: "சமுர்த்தி சிப்தொர" புலமைப்பரிசில் திட்டம்: பதுளை மாவட்டம்

125/ '18

கௌரவ சமிந்த விஜேசிறி,— ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் "சமுர்த்தி சிப்தொர" புலமைப்பரிசில் எனும் பெயரில் ஒரு நிகழ்ச்சித்திட்டம் செயற்படுத்தப்படுகின்றதா;

(ii) ஆமெனில், அந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கங்கள் யாவை;

(iii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை "சமுர்த்தி சிப்தொர" புலமைப்பரிசில் பெற்ற பதுளை மாவட்ட மாணவ, மாணவிகளின் பெயர்கள் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின் படி வெவ்வேறாக யாவை;

(iv) எதிர்வரும் காலத்தில் தற்போதுள்ளதைவிட அதிக அளவிலான புலமைப் பரிசில்களை பதுளை மாவட்டத்துக்கு வழங்க அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-08

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-08

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks