01

E   |   සි   |  

 திகதி: 2019-02-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0122/2019: பாடசாலைக் கட்டடங்களின் நிர்மாணம்: பதுளை மாவட்டம்

122/ '18

கௌரவ சமிந்த விஜேசிறி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தினால் பதுளை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்காக நிர்மாணிப்பட்ட இரண்டு மாடி மற்றும் மூன்று மாடிக் கட்டிடங்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைகளின் பெயர், முகவரிகள் யாவை என்பதையும்;

(iii) இக்கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்ட ஆட்கள்/நிறுவனங்களின் பெயர் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;

(iv) மேற்படி நிர்மாணப் பணிகளுக்காக ஒவ்வொரு ஆளுக்கும்/நிறுவனத்திற்கும் செலுத்தப்பட்ட பணத்தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(v) மேற்படி நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெற்றுக்கொடுக்கும் போது மாகாண கல்வித் திணைக்களம் பின்பற்றிய முறையியல் யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-07

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2019-03-19

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks