01

E   |   සි   |  

 திகதி: 2019-02-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0116/2019: ஊவா மாகாண சபை நிருவகிக்கும் பாடசாலைகள்: கட்டடங்கள்

116/ '18

கௌரவ சமிந்த விஜேசிறி,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஊவா மாகாண சபையின் கீழ் நிருவகிக்கப்படும் பாடசாலைகள் யாவை என்பதையும்;

(ii) ஊவா மாகாணத்தின் முதலமைச்சர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் மேற்படி பாடசாலைகளுக்கு மாகாண சபையின் நிதி ஏற்பாட்டில் வழங்கப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) கட்டடங்கள் வழங்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;

(iv) குறித்த நிர்மாணிப்புகள் வழங்கப்பட்ட ஆட்களினதும் கம்பனிகளினதும் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;

(v) மேற்படி நிர்மாணிப்புகளுக்காக மாகாண சபை செலவிட்டுள்ள பணத்தொகை தனித்தனியாக யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-08

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-18

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks