04

E   |   සි   |  

 திகதி: 2019-02-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0070/2019: நாணயத் தாள்களை அச்சிடுதல்: விபரம்

70/ '18

கௌரவ தயாசிறி ஜயசேகர,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் இலங்கையில் செல்லுபடியாகும் நாணயத் தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகள் அச்சிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களின் எண்ணிக்கை யாது;

(ii) இவ்வாறு அச்சிடுவதற்கான காரணம் யாது;

(iii) மேற்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அச்சிடப்பட்ட நாணயங்களின் பெறுமதியை வெவ்வேறாக குறிப்பிடுவாரா;

(iv) இதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சாதகம் அல்லது பாதகம் குறித்து விளக்கமளிப்பாரா;

(v) மேற்படி அச்சிடுவதன் மூலம் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாயின் பெறுமதி உயர்வடைந்துள்ளதா அல்லது வீழ்ச்சியடைந்துள்ளதா;

(vi) 2018ஆம் ஆண்டு ஏப்பிறல் அல்லது மே மாதத்தில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்கு புதிதாக நாணயங்கள் அச்சிடப்பட்டமை காரணமாக அமைந்துள்ளதா;

(vii) இன்றேல், இதற்கான காரணம் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-22

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-02-22

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks