பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
67/ '18
கௌரவ தயாசிறி ஜயசேக்கர,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை,
(i) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு மற்றும் அதன் பெறுமதி;
(ii) மேற்படி தங்கத்தில் ஆபரண உற்பத்திக்காக உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அளவு;
(iii) ஏற்றுமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு;
(iv) வருடாந்த ஏற்றுமதி பெறுமதி;
ஒவ்வொரு வருடத்துக்கமைய வெவ்வேறாக யாவை என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இன்றளவில் இனங்காணப்பட்டுள்ள தங்க உற்பத்திக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள உள்நாட்டுத் தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரை தங்கத்தின் மீது விதிக்கப்பட்ட வரி வகைகள் யாவை என்பதையும்;
(iii) அவ்வாறு விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகளின் வருடாந்த சதவீதங்கள் யாவை என்பதையும்;
(iv) உள்நாட்டு தங்கம் சார்ந்த கைத்தொழிலை பாதுகாப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் குறிப்பிடுவாரா என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-08
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks