logo

02

E   |   සි   |  

 திகதி: 2019-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0008/2019: Chandrika Wewa polluted by dumping garbage from Embilipitiya Weekly fair

8/ '18

கௌரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா வாவியிலிருந்து குடிப்பதற்கும், விவசாய நடவடிக்கைகளுக்கும் தண்ணீரைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) எம்பிலிப்பிட்டிய வாரச் சந்தையின் கழிவுப்பொருட்கள் சந்திரிக்கா வாவியில் சேர்வதால் பாரியளவில் சுற்றாடல் மாசு ஏற்படுவதை அறிவாரா என்பதையும்;

(iii) ஆமெனில், அந்த நிலைமையைத் தணிப்பதற்கு அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-21

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks