logo

03

E   |   සි   |  

 திகதி: 2010-12-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0697/2010: Pension Scheme for Farmers

0697/’10 கெளரவ புத்திக பத்திரண,- கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,- (அ) விவசாயிகளின் வாழ்க்கை நிலைமையை பாதுகாப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அவர் அறிவாரா? (ஆ) (i) தற்போது விவசாய ஓய்வூதியம் பெறுகின்றவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும், (ii) விவசாயிகளை விவசாய ஓய்வூதியத்திட்டத்தில் இணைத்துக்கொள்கின்ற செயன்முறை யாதென்பதையும், (iii) விவசாய ஓய்வூதியமாக மாதமொன்றுக்கு ஒருவருக்கு வழங்கப்படும் பணத்தொகை எவ்வளவென்பதையும், அவர் குறிப்பிடுவாரா? (இ) தற்போது கிடைக்கின்ற விவசாய ஓய்வூதியமானது நிலவுகின்ற வாழ்க்கைச் செலவு நிலைமையின்படி போதுமானதென அவர் ஏற்றுக்கொள்கின்றாரா? (ஈ) (i) இப்போது வழங்கப்படுகின்ற விவசாய ஓய்வூதியத்தை தற்போதை வாழ்க்கைச் செலவின் நிலைமைக்கேற்ப அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் , (ii) ஆமெனில் அதிகரிக்கப்படும் விவசாய ஓய்வூதியத் தொகை எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (உ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-12-10

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks