01

E   |   සි   |  

 திகதி: 2018-10-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1152/2018: Repairing the road from Agaliya-Mulkada Bridge to Nagoda Baddegama main road

1152/ '18

கெளரவ பந்துல லால் பண்டாரிகொட,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வெலிவிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு தொடக்கம் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுடன் தொடர்புபடுத்தும் அகலிய முல்கட வரை இணைப்பதற்கு பெரும் நிதி செலவிடப்பட்டு ஒரு பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி பாலத்திலிருந்து நாகொட பத்தேகம பிரதான வீதி வரை செல்லும் பாதை நிர்மாணிக்கப்படாமையினால் பயணிகளான மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

(iii) இந்த வீதியை நிர்மாணிக்குமாறு கோரி நான் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மதிப்பீடுகளுடன் கோரிக்கைகளை சமர்ப்பித்த போதிலும், இது வரை நிதி ஏற்பாடுகள் கிடைக்கவில்லை என்பதை அறிவாரா என்பதையும்;

(iv) 2018 ஆம் ஆண்டில் இந்த வீதியை நிர்மாணிக்க உங்கள் அமைச்சின் கீழ் நிதி ஒதுக்கப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-25

கேட்டவர்

கௌரவ பந்துல லால் பண்டாரிகொட, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks