logo

03

E   |   සි   |  

 திகதி: 2018-10-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

1117/2018: Pricing formula for fuel

1117/ '18

கௌரவ தயாசிறி ஜயசேகர,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) எரிபொருள் விலை தளம்பல் அடையும் போது பொது மக்கள் போக்குவரத்து சேவைகளின் பயணக் கட்டணமும் தளம்பல் அடையக் கூடிய விதத்தில் விலை சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அவ்விலை சூத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட வருடம் யாதென்பதையும்;

(iii) அவ்விலை சூத்திரத்தை இச்சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iv) பொதுப் பிரயாணிகள் சேவைகளுடன் சம்பந்தப்பட்ட சங்கங்கள்/ சபைகளிடம் மேற்படி விலை சூத்திரத்தை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) எரிபொருள் விலை தளம்பல் அடையும் சந்தர்ப்பங்களின் போது அவ் விலை சூத்திரத்திற்கமைய பொது போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டு/அதிகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி சந்தர்ப்பங்கள் பற்றிய தகவல்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iii) விலை சூத்திரமொன்று அறிமுகப்படுத்தவில்லை எனில், எதிர்காலத்தில் அதற்கான நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iv) விலை சூத்திரமொன்று அறிமுகப்படுத்த எதிர்பார்க்கின்ற திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-12

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks