பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0634/ ’10
கெளரவ அநுர திஸாநாயக்க,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010.08.01 ஆம் திகதியளவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டிருந்த புதிய ஆட்சேர்ப்புகள் யாவையென்பதையும்,
(ii) சனசபை செயலாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அதில் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பதையும்,
(iii) மேற்படி பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்யத் தேவையான ஆகக்குறைந்த தகைமைகள் யாவையென்பதையும்,
(iv) சனசபை செயலாளர் பதவிக்கென ஆட்சேர்ப்புச் செய்யும் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,
(v) தற்போது அறிவித்தல் வெளியிடப்பட்டு. நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்,
(vi) அவ்வாறாயின், நேர்முகப் பரீட்சையில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,
(vii) இதில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,
(viii) மேற்படி ஆட்சேர்ப்பினை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவு செய்யும் திகதிகள் யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இப்புதிய பதவிக்காக சம்பந்தப்பட்ட அமைச்சின் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதித் தொகை யாதென்பதையும்,
(ii) நிதி ஒதுக்கப்படாதிருப்பின் அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-11-26
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks