01

E   |   සි   |  

 திகதி: 2010-11-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0630/2010: Oil excavating in Mannar

0630/ ’10

கெளரவ அனுர திசாநாயக்க,—  பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2010.07.20 ஆம் திகதியளவில் மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய்க் கிணறு அகழ்வுப் பணிகளின் நிலமை யாதென்பதையும்,

           (ii)    இந்தியாவின் கெயான் கம்பனியுடன் எண்ணெய் கிணறுகளை அகழ்வது தொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை யாதென்பதையும்,

(iii) மேற்படி உடன்படிக்கையின் பிரகாரம் கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்ட மொத்த நிலப்பரப்பில் கெயான் கம்பனிக்கு வழங்கப்பட்ட நிலப் பரப்பின் அளவு எவ்வளவென்பதையும்,

(iv) அந்த உடன்படிக்கையின் பிரகாரம் அக்கம்பனி அகழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய திகதி யாதென்பதையும்,

(v) குறிப்பிட்ட தினத்தில் அகழ்வுப் பணிகள் பூர்த்தி செய்யப்படாவிடின் உடன்படிக்கையின் பிரகாரம் எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தக் கம்பனியின் கணக்கு நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்,

(ii) அவ்வாறாயின், குறிப்பிட்ட உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட திகதி தொடக்கம் 2010.07.20 ஆந் திகதி வரையிலான கணக்கு அறிக்கைகளை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்,

(iii) அந்தக் கணக்கறிக்கைகளை மீளாய்வு செய்யும் பொருட்டு இலங்கையில் பொறுப்புக் கூறக் கூடிய ஏதேனும் நிறுவனம் உள்ளதா என்பதையும்,

(iv) அவ்வாறெனின், அதன் பெயர் என்னவென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், என்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-11-25

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks