01

E   |   සි   |  

 திகதி: 2010-11-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0613/2010: Expansion of Refinery at Sapugaskanda

0613/ ‘10

கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை விஸ்தரிக்கும் கருத்திட்டத் திற்காக மதிப்பிடப்பட்ட செலவினம் எவ்வளவு என்பதையும்,

           (ii)    அந்தக் கருத்திட்டம் கடன் வசதியினூடாகவா அல்லது கொடைகளின் கீழா முன்னெடுக்கப்படுகின்றது என்பதையும்,

(iii) அந்தக் கருத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கும் வருடம் யாதென்பதையும்,

(iv) குறித்த கருத்திட்ட நிறைவின் போது நாளாந்த எண்ணெய் சுத்திகரிப்பு கொள்ளளவினை எத்தனை மசகு எண்ணெய் பீப்பாக்களால் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதா என்பதையும்,

(ii) ஆமெனில், அந்தக் கருத்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்க்கும் வருடம் யாதென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-11-10

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பா.உ.

அமைச்சு

பெற்றோலியக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks