பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
573/ '18
கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வடமேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் தற்போது பணிபுரியும் ஊழியர்களின் பெயர்கள் யாவை;
(ii) அதன் பணிப்பாளர் சபையிலுள்ளோர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் கல்வித் தகைமைகள் யாவை;
(iii) தற்போது அந்த அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள பயணிகள் போக்குவரத்து உரிமப்பத்திரங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வீதி இலக்கத்துக்கமைய வெவ்வேறாக யாது;
என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) அந்த அதிகாரசபையின் பயணிகள் வாகன போக்குவரத்து உரிமப்பத்திர புத்தகங்கள் நான்கு காணாமல் போயுள்ளதை அவர் அறிவாரா ;
(ii) ஆமெனின், அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் யாவை;
என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) தற்போது வடமேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஓர் ஊழல் நிறைந்த நிறுவனமென குற்றம் சாட்டப்பட்டுள்ளதனால் அதனை தற்போதைய நல்லாட்சி அரசின் கொள்கைகளுக்கமைய நிர்வகிக்க அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-06
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks